/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணை பாசன நீர் 80 நிமிடங்கள் நிறுத்தம்
/
வைகை அணை பாசன நீர் 80 நிமிடங்கள் நிறுத்தம்
ADDED : ஜூலை 26, 2025 04:18 AM
ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து பாசன கால்வாய் வழியாக சென்ற நீர் நேற்று 80 நிமிடங்கள் நிறுத்தப்பட்டன.
மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியில் உள்ள இருபோக பாசன நிலங்களின் முதல் போகத்திற்கு வினாடிக்கு 800 கன அடி வீதம் வைகை அணையில் இருந்து கால்வாய் வழியாக நீர் செல்கிறது. கால்வாய் வழியாக சென்ற நீர் நேற்று 80 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. நீர்வளத்துறையினர் கூறியதாவது:
விராலிபட்டி அருகே கால்வாயில் விழுந்தவரின் உடலை மீட்பதற்காக நேற்று பிற்பகல் 2:40 மணிக்கு நீர் நிறுத்தப்பட்டு, மாலை 4:00 மணிக்கு மீண்டும் வினாடிக்கு 800 கன அடி வீதம் திறந்து விடப்பட்டது. நேற்று மாலை 4:00 மணிக்கு வைகை அணை நீர்மட்டம் 65.65 அடியாக உயர்ந்தது.
அணை உயரம் 71 அடி. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1837 கன அடி. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம் போல் வெளியேறுகிறது.

