ADDED : ஆக 13, 2025 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: ஆணவக் கொலையை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி தேனி பங்களாமேட்டில் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்டச் செயலாளர் ரபீக், மேற்கு மாவட்டச் செயலாளர் மதன் தலைமை வகித்தனர்.
மாநில துணைச் செயலாளர் செல்லப்பாண்டியன் பேசினார். மண்டல செயலாளர் தமிழ்வாணன், மண்டல துணைச் செயலாளர் சுருளி, முன்னாள் மாவட்டச் செயலாளர் நாகரத்தினம், மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்புவடிவேல், மாவட்ட துணைச் செயலாளர் ஆரோக்கியசாமி பங்கேற்றனர். நகரச் செயலாளர் ஈஸ்வரன் நன்றி கூறினார்.