/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நாளை மறுநாள் கம்பம் நடும் விழா

ADDED : ஏப் 14, 2025 05:54 AM
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நாளை கம்பம் கொண்டு வரும் நிகழ்வும், நாளை மறுநாள் கம்பம் நடும் விழாவும் நடக்கிறது.
தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு திருவிழாவிற்கான கம்பம் கொண்டு வரும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
இதனை தொடர்ந்து நாளை இரவு அம்மன் கோயில் வீட்டில் இருந்து, கோயிலில் எழுந்தருளல் நிகழ்வு நடக்க உள்ளது. நாளை மறுநாள் காலை கம்பம் நடுதல் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நடக்கிறது.
திருவிழா மே 7 முதல் மே 13 வரை நடக்கிறது. தேர் திருவிழா மே 9ல் நடக்கிறது.
தங்க கவசம் அணிதல், சித்திரை தமிழ் புத்தாண்டு, கம்பம் நடுதல் நிகழ்ச்சிகளை முன்னிட்டு சில நாட்களுக்கு அம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.