/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீரபாண்டி முல்லை ஆற்றில் ஆபத்தான குளியல் தடுப்பு அமைத்தும் பலனில்லை
/
வீரபாண்டி முல்லை ஆற்றில் ஆபத்தான குளியல் தடுப்பு அமைத்தும் பலனில்லை
வீரபாண்டி முல்லை ஆற்றில் ஆபத்தான குளியல் தடுப்பு அமைத்தும் பலனில்லை
வீரபாண்டி முல்லை ஆற்றில் ஆபத்தான குளியல் தடுப்பு அமைத்தும் பலனில்லை
ADDED : ஜூன் 22, 2025 12:17 AM

தேனி: வீரபாண்டி முல்லைபெரியாற்றங் கரையில் தடுப்பு அமைத்தும் தடைகளை மீறி சிலர் ஆற்றில் இறங்குவதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை துவங்கி உள்ளதால் கேரள மாநிலம், தேனி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் மழை பெய்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்தும் வினாடிக்கு 1800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் இரு கரைகளையும் தழுவி வெள்ளம் கரை புரண்டுசெல்கிறது.
ஆனால் வீரபாண்டியில் ஆபத்தை உணராத பலரும் ஆற்றில் இறங்கி நீரில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழப்பது தொடர்கிறது.
வீரபாண்டி முல்லைபெரியாற்றில் நீர் வரத்து அதிகரித்திருந்த போது, ஜூன் 7 ல் குளிப்பதற்காக இறங்கிய பெண் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். அதே போல் தற்போதும் அதிக அளவில் நீர் செல்கிறது. தடுப்பணை பகுதிக்கு செல்ல வேண்டாம் என்பதை வலியுறுத்தும் வகையில் தடுப்புகளும் வைக்கப்பட்டுள்ளன. இதனை மீறி சிலர் குடும்பத்துடனும், இளைஞர்கள் நண்பர்களுடனும் சென்று குளிக்கின்றனர். ஆபத்தை உணர்ந்து நீர் அதிகம் செல்லும் நேரங்களில் இதனை தவிர்க்க வேண்டும். போலீசாரும் அப்பகுதியில் பொதுமக்கள் இறங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.