/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உற்பத்தி அதிகரிப்பால் காய்கறிகள் விலை சரிவு ; உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை
/
உற்பத்தி அதிகரிப்பால் காய்கறிகள் விலை சரிவு ; உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை
உற்பத்தி அதிகரிப்பால் காய்கறிகள் விலை சரிவு ; உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை
உற்பத்தி அதிகரிப்பால் காய்கறிகள் விலை சரிவு ; உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை
ADDED : ஆக 18, 2024 07:27 AM
தேனி : தேனி மாவட்டத்தில் காய்கறி உற்பத்தி அதிகரித்துள்ளதால் விலை சரிந்துள்ளது. உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் ஏப்., மே மாதம் கோடை மழை கூடுதலாக பெய்ததால் தக்காளி உள்ளிட்ட சில காய்கறிப் பயிர்கள் சேதமடைந்தன. இதனால் தக்காளி வரத்து குறைந்து விலை உயர்ந்து காணப்பட்டது. ஜூன் இறுதியில் இயல்பு நிலை காணப்பட்டது.
இதனால் விவசாயிகள் பலரும் தக்காளி, கத்தரி, வெண்டை உள்ளிட்ட காய்கறி சாகுபடியில் ஆர்வம் காட்டினர். இதனால் காய்கறி சாகுபடி பரப்பு அதிகரித்து.
ஜூலை 17ல் கத்தரி கிலோ ரூ.45, தக்காளி ரூ.60, புடலை ரூ.35, பாகற்காய் ரூ.45, முருங்கைகாய் ரூ.80, மிளகாய் ரூ.110, பீர்க்கை ரூ.40, கொத்தவரை ரூ.35, சின்ன வெங்காயம் ரூ.45, அவரை ரூ.60க்கு விற்பனையானது.
தற்போது மாவட்டத்தில் தக்காளி 280 எக்டேர், கத்தரி 60எக்டேர், வெண்டை 50 எக்டேர், சின்ன வெங்காய் 350 எக்டேர், முருங்கை 2300 எக்டேர் உள்பட 4300 எக்டேர்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடி செய்த அனைத்து வகை காய்கறிகளும் அறுவடை மும்மரமாகி மார்கெட்டிற்கு வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் ஒரே மாதத்தில் காய்கறிகள் விலை பாதிக்கும் கீழ் குறைந்தது.
தேனி உழவர் சந்தையில் நேற்று கத்தரி ரூ.20, தக்காளி ரூ.12, வெண்டி ரூ.10, புடலை ரூ.22, பாகற்காய் ரூ.14, பீர்க்கை ரூ.20, முருங்கைகாய் ரூ.15 முதல், மிளகாய் ரூ.40 முதல், அவரை ரூ.25, வெங்காயம் கிலோ ரூ.32க்கு விற்பனையானது.
விவசாயிகள் கூறுகையில்,
'உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. கேரளா வயநாடு சம்பவத்தால் அதிகளில் காய்கறி கேரளாவிற்கு அனுப்ப இயலவில்லை. மேலும் காய்கறிகளை மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க பயிற்சி வழங்க வேண்டும். அரசு ஊராட்சி ஒன்றிய அளவில் குளிர்சாதன குடோன்கள் அமைக்க வேண்டும்', என்றனர்.
அதிகாரிகள் கூறுகையில், சில நாட்களாக வேளாண் பொருட்கள் உற்பத்தி அதிகம் உள்ளது. மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கும், அண்டை மாவட்டங்களுக்கு காய்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன.
கேரளா ஓணம் பண்டிகைக்காக அதிக அளவில் காய்கறிகள் கொண்டு செல்லப்படும்.
இதனால் காய்கறிகள் விலை உயரும். இந்தாண்டு ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் காய்கறி விலைகள் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.
ஒரு மாதத்திற்கு இதே விலை நீடிக்க வாய்ப்புள்ளது என்றனர்.