/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சரக்கு வேன் பழுதானதால் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
/
சரக்கு வேன் பழுதானதால் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
ADDED : அக் 16, 2024 04:31 AM

தேனி : தேனி மதுரை ரோட்டில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறும் பகுதியில் சரக்கு வேன் பழுதாகி நின்றதால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
தேனி மதுரை ரோட்டில் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தோட்டக்கலத்துறை அலுவலகம் முதல் அரசு ஐ.டி.ஐ., வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.
சில வாரங்களுக்கு முன் அரைகுறை பணியுடன் போக்குவரத்திற்காக ரோடு திறக்கப்பட்டது. நேற்று மதியம் மதுரை ரோட்டில் இருந்து நகர்பகுதிக்கு சரக்கு ஏற்றி வந்த வேன், வேளாண் பொறியியல் துறை அலுவலகம் எதிரே பழுதாகிநின்றது.
நடுரோட்டில் நின்றதால் மதுரைரோட்டில் வந்த வாகனங்கள் செல்ல வழியின்றி நீண்ட துாரத்திற்கு அணிவகுத்து நின்றன. எதிர் திசையிலும் வாகனங்கள் செல்லமுயன்றதால், புது பஸ் ஸ்டாண்டில் இருந்து நகர்பகுதிக்கு சென்ற வாகனங்களும் வரிசையில் காத்திருந்தன.
இதனால் அப்பகுதியில் 30 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.