ADDED : அக் 02, 2024 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி மாவட்ட அனைத்து விஸ்வகர்ம மகாஜன சங்கத்தின் சார்பில் விஸ்கர்ம மக்கள் மன்ற திறப்பு விழா, விஸ்வகர்ம ஜெயந்திவிழா புதிய நிர்வாகிகள் தேர்வு ஆகிய முப்பெரும் விழா கருவேல்நாயக்கன்பட்டியில் நடந்தது.
புதிய தலைவராக விஸ்வா பில்டர் பாலமுருகன், செயலாளராக புகழேந்தி, பொருளாளராக திருமுழுச்சாமி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தொழிலதிபர் ரத்தினம் மன்றத்தை திறந்து வைத்தார். விழாவில் விஸ்வ பாரத் மக்கள் கட்சி தலைவர் பாபுஜி சுவாமிகள், ஹிந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் ராமராஜ், வெளிச்சம் அறக்கட்டளை சிதம்பரம், முன்னாள் நிர்வாகிகள் ராசாமணி, ஜெயசந்திரன் ஸ்தபதி, சமூதாயப் பெரியோர்கள் பலர் பங்கேற்றனர். கம்பம் மகேந்திரன் நன்றி கூறினார்.