ADDED : நவ 07, 2025 05:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாவட்ட அளவிலான குடியரசு தின போட்டிகள் 14,17,19 வயது பிரிவில் நடந்து வருகின்றன.
முத்துத்தேவன்பட்டி டி.எம்.எச்.என்.யூ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கான போட்டிகள் நடந்தது. இதில் 14, 19வயது பிரிவில் பெரியகுளம் வரதராஜநகர் ஸ்ரீவல்லிவரதராஜ் மெட்ரிக் பள்ளி அணி முதலிடமும், 17 வயது பிரிவில் வெள்ளையம்மாள்புரம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி அணி முதலிடமும் வென்றன.

