/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறை
/
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறை
ADDED : நவ 07, 2025 05:57 AM

தேனி: நவ.: 7-: மாணவியை பாலியல் தொந்தரவு செய்த கூலித்தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆண்டிபட்டி தாலுகா கூலித் தொழிலாளி முருகன் 42. இவரது மனைவி வைஸ்னவி தொண்டு நிறுவனத்தில் வேலை செய்து தொண்டு நிறுவனம் சார்பில் பெண்களுக்கான சானிடரி நாப்கின், கேரம், செஸ் போர்டுகள் வழங்கினர்.
அப்பகுதியில் பிளஸ் 1 படிக்கும் சிறுமி 2023அக்.1ல் காலாண்டு தேர்வு விடுமுறையில் வீட்டில் இருந்தார். அப்போது சிறுமியின் வீட்டிற்கு சென்ற கூலித்தொழிலாளி முருகன் செஸ் போர்டை சிறுமியிடம் கொடுத்து, 'தான் தொண்டு நிறுவனத்தில் இருந்து வருவதாகவும் சானிடரி நாப்கின் தொண்டு நிறுவனம் வழங்கியுள்ளது. அதனை தனது வீட்டில் மனைவியிடம் வாங்கிக் கொள்ளுமாறு கூறி சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
அப்போதுவாசலில் நின்றிருந்த சிறுமியை வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் இழுத்து பாலியல் இடையூறு செய்தார். பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். சிறுமி புகாரில் கூலித்தொழிலாளியை போக்சோ வழக்கில் கடமலைக்குண்டு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்குமாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
நேற்று விசாரணை முடிந்து கூலித்தொழிலாளி முருகனுக்கு 4 ஆண்டுகள் சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம்விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணத் தொகை தமிழக அரசு வழங்க வேண்டும் என தீர்ப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

