/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மாவட்ட பார்வையாளர் கள ஆய்வு
/
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மாவட்ட பார்வையாளர் கள ஆய்வு
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மாவட்ட பார்வையாளர் கள ஆய்வு
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மாவட்ட பார்வையாளர் கள ஆய்வு
ADDED : டிச 19, 2024 05:40 AM

தேனி: மாவட்டத்தில் வாக்காளர்பட்டியிலில் சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பித்தவர்களின் படிவங்கள் பகுதிவாரியாக மாவட்ட பார்வையாளர் மகேஸ்வரி கள ஆய்வு செய்தார்.
மாவட்டத்தில் 2025 ஜன.,6ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்காக நடந்த முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
மாவட்ட வாக்காளர்பட்டியில் தேர்தல் பார்வையாளர் மகேஸ்வரி ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் விண்ணப்பித்திருந்தவர்களின் படிவங்களை கள ஆய்வு செய்தார்.
நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில், பார்வையாளர் முன்னிலை வகித்தார்.
இதில் பணிகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடன், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., தாட்சாயணி, கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், தாசில்தார்கள், நகராட்சி கமிஷனர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

