/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
/
பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : நவ 28, 2024 02:55 AM
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் பெய்த மழையால் நீர்வரத்து 608 கன அடியாக அதிகரித்தது.
கடந்த சில நாட்களாக மழையின்றி அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி தேக்கடியில் 8.4 மி.மீ., பெரியாறில் 10 மி.மீ., மழை பதிவானது. இதனால் அணைக்கு வினாடிக்கு 190 கன அடியாக இருந்து நீர்வரத்து 608 கன அடியாக அதிகரித்தது. தமிழகப் பகுதிக்கு 822 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120.75 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). நேற்று பகல் முழுவதும் மேகமூட்டத்துடன் லேசான சாரல் மழை பெய்தது.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு போதிய மழை இல்லை. பருவமழை தீவிரமடைந்தால் மட்டுமே நீர்மட்டம் உயரும்.