/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணையின் 58ம் கால்வாய் ஷட்டரில் நீர் கசிவு
/
வைகை அணையின் 58ம் கால்வாய் ஷட்டரில் நீர் கசிவு
ADDED : ஆக 11, 2025 04:13 AM
ஆண்டிபட்டி: வைகை அணை நீர்மட்டம் 70 அடியை நெருங்கி உள்ளது. இந்நிலையில் 58ம் கால்வாயில் நீர் வெளியேற்றும் மதகுகளின் ஷட்டரில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக பெரியாறு அணையில் இருந்து தொடர்ந்த நீர் வரத்தால் வைகை அணை நீர்மட்டம் நேற்று 69.77 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 688 கன அடியாகவும், அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு 569 கன அடி நீரும் வெளியேறுகிறது. வைகை அணை நீர்மட்டம் 67 அடியாக உயந்தால் மட்டுமே 58ம் கால்வாயில் நீர் திறக்க முடியும். தற்போது நீர்மட்டம் 70 அடி வரை உயர்ந்துள்ளதால், 58ம் கால்வாய் மதகுகளின் ஷட்டர்களில் நீர் கசிந்து வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் வைகை அணை மெயின் ஷட்டர், 58-ம் கால்வாய் ஷட்டர்களில் நீர் திறக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.