/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு
/
வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு
ADDED : ஆக 14, 2025 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி:வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீரின் அளவு வினாடிக்கு 700 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு ஜூன் 15 முதல் கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆக. 4ல் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நீர் மறுநாள் முதல் வினாடிக்கு 500 கன அடியாக திறந்து விடப்பட்டது. அந்த நீரின் அளவு நேற்று காலை வினாடிக்கு 700 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணை நீர்மட்டம் 69.85 அடியாக இருந்தது(மொத்த உயரம் 71 அடி). நீர் வரத்து வினாடிக்கு 725 கன அடி. மதுரை, தேனி, ஆண்டிபட்டி சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது.