/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணையில் நீர் திறப்பு குறைப்பு
/
வைகை அணையில் நீர் திறப்பு குறைப்பு
ADDED : ஜூலை 20, 2025 03:02 AM
ஆண்டிபட்டி:வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு கால்வாய் வழியாக திறக்கப்பட்ட நீரின் அளவு வினாடிக்கு 800 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
வைகை அணையில் இருப்பில் இருந்த நீர் ஜூன் 15 முதல் மதுரை, திண்டுக்கல் மாவட்டபெரியாறு பிரதான கால்வாய் பாசனப்பகுதியில் இருபோக பாசன நிலங்களின் முதல் போகத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதம் திறந்து விடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட வைகை பூர்வீக பாசன நிலங்களுக்கு ஜூன் 25ல் திறக்கப்பட்ட நீர் ஜூலை 2ல் நிறுத்தப்பட்டது.
வைகை அணை நீர்வளத் துறையினர் கூறியதாவது: நேற்று மதுரை, வாடிப்பட்டி பகுதிகளில் பெய்த மழையால் கால்வாய் வழியாக திறக்கப்பட்ட நீர் வினாடிக்கு 100 கன அடி வீதம் குறைக்கப்பட்டு 800 கனஅடியாக வெளியேறியது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம் போல் வெளியேறுகிறது என்றனர். அணை நீர்மட்டம் 63.65 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 71 அடி). நீர் வரத்து வினாடிக்கு 1646 கன அடி.

