/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு
/
வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு
ADDED : மார் 19, 2025 02:54 AM
ஆண்டிபட்டி,:மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து 6 நாட்களுக்குப்பின் கால்வாய் வழியாக மீண்டும் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இம் மாவட்டங்களின் 2ம் போக பாசனத்திற்காக டிசம்பர் 18 முதல் வைகை அணையில் இருந்து நீர் திறந்து விடப்படுகிறது. முறைப்பாசனம் நடைமுறையில் இருப்பதால் அணையில் சில நாட்கள் நீர் திறந்தும், சில நாட்கள் நிறுத்தியும் வைக்கின்றனர். மார்ச் 12ல் நிறுத்தப்பட்ட நீர் ஆறு நாட்களுக்கு பின் நேற்று காலை 6:00 மணிக்கு வினாடிக்கு 650 கன அடி வீதம் கால்வாய் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று அணை நீர்மட்டம் 59.91 அடியாக இருந்தது. அணை உயரம் 71 அடி. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 184 கன அடி.