/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூணாறில் குடிநீர் தட்டுப்பாடு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
/
மூணாறில் குடிநீர் தட்டுப்பாடு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மூணாறில் குடிநீர் தட்டுப்பாடு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மூணாறில் குடிநீர் தட்டுப்பாடு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ADDED : மார் 20, 2024 12:20 AM
மூணாறு : மூணாறு ஊராட்சியில் 9ம் வார்டில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு வார்டு உறுப்பினர் மார்ஸ்பீட்டர், தேவிகுளம் சப் கலெக்டர் ஜெயகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு அளித்தார்.
மனுவில் கூறியிருப்பதாவது., 9ம் வார்டில் 1200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்கள் ஊராட்சி சார்பிலான குடிநீர், நீர்நிலைகள் ஆகியவற்றின் தண்ணீரை பயன்படுத்துகின்றனர். அந்த தண்ணீரை சிலர் சட்ட விரோதமாக தனியார் தங்கும் விடுதிகளுக்கு குழாய்கள் மூலம் சப்ளை செய்து மாதம்தோறும் பெரும் தொகையை கட்டணமாக வசூலிக்கின்றனர்.
தவிர இப்பகுதி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வழங்க ஜல ஜீவன் திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தப்பட்ட போதும் பணிகள் எதுவும் நடக்கவில்லை. அதனால் 9ம் வார்டில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வழங்கி, தங்கும் விடுதிகளுக்கு சட்ட விரோதமாக குடிநீர் சப்ளை செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியுள்ளார்.

