/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் நிறுத்தம்
/
வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் நிறுத்தம்
ADDED : அக் 25, 2025 01:02 AM
ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த மழையால் முல்லைப் பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அக்., 18ல் 62.66 அடியாக இருந்த நீர்மட்டம் அக்.21ல் 69 அடியானது. அணை உயரம் 71 அடி. மழைக்கான சூழல் தொடர்ந்ததால் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் முழுவதும் ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டது.
நீர்வரத்து குறைந்த நிலையில் நீர்மட்டத்தை 70 அடிவரை உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று மதியம் 12:00 மணிக்கு அணை நீர்மட்டம் 69.59 அடியாக இருந்தது. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 2286 கன அடியாக இருந்தது.
மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களின் பாசனத்திற்காக கால்வாய் வழியாக வினாடிக்கு 1430 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஆற்றின் வழியாக திறக்கப்பட்ட நீர் நேற்று மதியம் 12:45 மணிக்கு நிறுத்தப்பட்டது. குடிநீருக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது.

