/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இணைய பக்கத்தில் மாற்றம் தேவை: கலெக்டர் ஷஜீவனா கண்காணிப்பாரா
/
இணைய பக்கத்தில் மாற்றம் தேவை: கலெக்டர் ஷஜீவனா கண்காணிப்பாரா
இணைய பக்கத்தில் மாற்றம் தேவை: கலெக்டர் ஷஜீவனா கண்காணிப்பாரா
இணைய பக்கத்தில் மாற்றம் தேவை: கலெக்டர் ஷஜீவனா கண்காணிப்பாரா
ADDED : பிப் 22, 2024 06:06 AM
தேனி : 'மாவட்ட இணைதள பக்கமான https://theni.nic.in/ ஓராண்டிற்கு மேலாக தகவல்கள் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இதனை புதுப்பித்து தற்போதுள்ள அதிகாரிகள், அவர்களின் தொடர்பு எண்களை பதிவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் தொடர்பான வரலாறு, துறைகள், மக்கள் தொகை, சுற்றுலா, அதிகாரிகள், அறிவிப்புகள், வேலைவாய்ப்பு தகவல்கள், டெண்டர்கள், அரசு திட்டப் பணிகள், நடைப்பெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள், துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள், பேரிடர் காலம் தொடர்பான கையேடுகள் உள்ளிட்ட தகவல்கள் மாவட்ட அரசு இணைய பக்கமான https://theni.nic.in/ ல் பதிவிடப்படுகிறது. இதில் உள்ள துறை அதிகாரிகளின் எண்கள் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. ஆனால் அந்த இணைய பக்கத்தில் பல்வேறு துறை அதிகாரிகளின் பெயர்கள் ஓராண்டிற்கு மேலாக மாற்றப்படாமல் உள்ளன. அவர்களது தொடர்பு எண்களும் அதில் இடம் பெற்றுள்ளன.
இதனால் அதில் இடம் பெற்றுள்ள அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளும் பொது மக்களுக்கு ஏமாற்றம் மிஞ்சுகிறது. இதனை தவிர்க்க துறை சார்ந்த அதிகாரிகள் மாறுதலாகி சென்றாலோ, அல்லது ஓய்வு பெற்றாலோ அதனை தொடர்ந்து கண்காணித்து மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.