UPDATED : நவ 14, 2026 06:51 PM
ADDED : நவ 14, 2026 06:47 PM

கம்பம்: சுருளிப்பட்டியில் ௹ 12 லட்சம் மதிப்பீட்டில் எம்.பி. தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து கட்டப்பட்ட கால்நடை பராமரிப்புதுறையின் கிளை நிலைய கட்டடம் திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில், தண்ணீர் மேல் நிலை தொட்டிக்கு கீழ் கால்நடை பராமரிப்பு துறையின் கிளை நிலையம் செயல்பட்டு வந்தது. கால்நடைகள் வளர்ப்போரின் கோரிக்கையை ஏற்று, கிளை நிலையத்திற்கு எம்.பி. தங்க தமிழ்செல்வன் தனது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து புதிய கட்டடம் கட்ட ரூ 12 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.
கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு ஒராண்டை கடந்தும், புதிய கட்டடம் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படவில்லை. மின் இணைப்பும் பெற முயற்சிக்கவில்லை. கட்டிய புதிய கட்டத்தை கால்நடை பராமரிப்புது துறையினர் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
குறிப்பு : இந்த செய்திக்குரிய படம் மெயிலில் உள்ளது.
