/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காட்டு யானை பலி: மின்னல் தாக்கி இறந்ததாக தகவல்
/
காட்டு யானை பலி: மின்னல் தாக்கி இறந்ததாக தகவல்
ADDED : நவ 15, 2024 05:34 AM

மூணாறு: பெரியாறு புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட வனப் பகுதிகளில் பெண் காட்டு யானை இறந்த நிலையில் கிடந்தது.
இடுக்கி மாவட்டத்தில் பெரியாறு புலிகள் சரணாலத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.
அப்போது அழுத வனச்சரகத்திற்கு உட்பட்ட புல்மேடு பகுதியில் காட்டு யானை இறந்த நிலையில் கிடப்பதை பார்த்தனர். அதுகுறித்து அழுத வனத்துறை அதிகாரி ஜோதிஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.
வனத்துறை கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் அனுராஜ் தலைமையில் சம்பவ இடத்தில் யானையின் உடல் பிரேத பரிசோதனை நடந்தது. 22 வயதுடைய பெண் யானை மின்னல் தாக்கி இறந்ததாக முதல்கட்ட தகவலில் தெரியவந்தது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் யானை இறந்ததற்கான முழுமையான காரணம் தெரிய வரும் என வனத்துறை மேற்கு பிரிவு உதவி இயக்குனர் சந்தீப் கூறினார்.