/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காம்பவுண்ட் சுவரை இடித்து நிலத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்
/
காம்பவுண்ட் சுவரை இடித்து நிலத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்
காம்பவுண்ட் சுவரை இடித்து நிலத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்
காம்பவுண்ட் சுவரை இடித்து நிலத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்
ADDED : ஏப் 22, 2025 06:37 AM
கூடலுார்: கூடலுார் அருகே நாயக்கர் தொழுவில் காம்பவுண்ட் சுவரை உடைத்து விளைநிலத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் வாழை மரங்களை சேதப்படுத்தன.
கூடலுார் அருகே வண்ணாத்திப் பாறை வனப்பகுதியை ஒட்டி நாயக்கர் தொழு உள்ளது. இப்பகுதியில் வாழை, தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
வனப்பகுதியை ஒட்டி இருப்பதால் காம்பவுண்ட் சுவர், சோலார் மின் வேலி அமைத்து விவசாயிகள் பயிர்களை பாதுகாத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனியார் தென்னந்தோப்பிற்குள் காம்பவுண்ட் சுவரை இடித்த காட்டு யானைகள் விளைநிலத்திற்குள் புகுந்தது.
அங்கு கட்டிப்போட்டிருந்த நாயை காலால் மிதித்ததில் நாய் பலியானது.
அதன்பின் வாழை மரங்களை சேதப்படுத்தியது. அதிகாலையில் அப்பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் தங்கியுள்ள விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.