
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு : மூணாறில் கல்லார் எஸ்டேட் செல்லும் ரோட்டில் ஊராட்சி குப்பை கிடங்கு உள்ளது. அங்கு திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்படுவதால், ஒரு தந்தம் கொண்ட இரண்டு ஒற்றை கொம்பன் காட்டு யானைகள் நாள் கணக்கில் முகாமிடுவது வழக்கம்.
நேற்று பகலில் குப்பை கிடங்கில் ஒற்றை கொம்பன் தீவனத்தை தேடி கொண்டிருந்த போது திடீரென வந்த வேறொரு ஆண் காட்டு யானை, ஒற்றை கொம்பனை தாக்க துவங்கியது. ஆக்ரோஷமாக மோதிக் கொண்டன. பின்னர் இரண்டு யானைகளும் பிரிந்து சென்றதால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

