/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அலைபேசி 'டவர்'கள் பயன்பாட்டுக்கு வருமா
/
அலைபேசி 'டவர்'கள் பயன்பாட்டுக்கு வருமா
ADDED : ஜூன் 09, 2025 02:44 AM

மூணாறு: மூணாறை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் பி.எஸ்.என்.எல்., சார்பில் அமைக்கப்பட்ட அலைபேசி 'டவர்'கள் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டின் 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தொலை துார கிராமங்கள், பின் தங்கிய பகுதிகள் ஆகியவற்றிற்கு தொலை தொடர்பு வசதி ஏற்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தியது. அதற்கு மத்திய அரசின் யூ.எஸ்.ஓ.எப். எனும் நிதி பயன்படுத்தப்படுகிறது. அந்த நிதியை கொண்டு இடுக்கி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 89 மையங்களில் பி.எஸ்.என்.எல்., சார்பில் அலைபேசி 'டவர்'கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மூணாறை சுற்றி எஸ்டேட் பகுதிகளில் மட்டும் 21 'டவர்'கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதற்கான பணிகள் அனைத்தும் பூர்த்தியாகி பல மாதங்கள் ஆகின்றன. இதனிடையே 33 'டவர்'களில் பேண்ட் வித் ஸ்பெக்ட்ரம் 700 மெகா ஹெர்ட்ஸ் எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாக தெரியவந்தது. அவற்றில் புதிய தொழில்நுட்பம் கொண்ட அலைபேசிகள் மட்டும் பயன்படுத்த இயலும் என்பதால் அனைத்து அலைபேசிகளும் பயன்படுத்தும் வகையில் தொழில்நுட்பத்தை மாற்றி அமைத்து ஒன்றரை மாதத்திற்குள் அனைத்து டவர்களும் பயன்பாட்டுக்கு வரும் என கடந்த ஜனவரியில் இடுக்கி எம்.பி. டீன்குரியாகோஸ் தெரிவித்தார். அவர் கூறிய கால அளவு முடிந்தும் டவர்கள் பயன்பாட்டுக்கு வராமல் காட்சி பொருளாக உள்ளதால், அவை எப்போது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.