/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களில் தடுப்பணைகள் அமைக்கப்படுமா; வீணாகும் மழை நீரை சேமிக்க நிரந்தர திட்டம் தேவை

ADDED : ஆக 06, 2025 07:57 AM

தேனி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளில் மானாவாரி சாகுபடியான சோளம், கம்பு, கேழ்வரகு, எள், மொச்சை, தட்டை உள்ளிட்டவைகள் அதிகம் பயிரிடப்படுகின்றன.
மழையை நம்பி பயிரிடப்படும் இப்பயிர்கள் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை மாற்றத்தால் விளைச்சல் குறைந்தது.
அதனால் தடுப்பணைகள் கட்டி மழை நீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க செய்தால் பருவமழை பொய்த்தாலும் மானாவாரி விவசாய பயிர்கள் பாதிக்காது என விவசாயிகள் கருதுகின்றனர்.
மலையடிவாரப் பகுதிகளில் தடுப்பணைகள் கட்டுவதால் சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், நீர் ஆதாரங்களை நம்பியிருக்கும் நகர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என வனஆர்வலர்கள் கருத்து தெரிவித்த போதிலும், சமூக ரீதியான பாதிப்புகளை கவனமாக ஆராய்ந்து அதற்கு ஏற்றார் போல் தடுப்பணைகள் கட்டலாம் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
நிலத்தடி நீர் மட்டம் உயர பயன்படும் ராமராஜ், தலைவர், 18ம் கால்வாய் விவசாய சங்கம், கோம்பை: சில ஆண்டுகளுக்கு முன்பு நான் கோம்பை ஊராட்சி தலைவராக இருந்தபோது, மலை அடிவாரப் பகுதியில் 400க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டி நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் மானாவாரிப் பயிர்கள் மட்டுமின்றி நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரித்து காய்கறி சாகுபடியையும் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தினேன். மலையில் இருந்து வரும் மழைநீர் ஓடை வழியாக வெளியேறி ஆற்றில் கலக்கின்றன. ஆனால் பல இடங்களில் கழிவுநீருடன் கலந்து குடியிருப்பு பகுதிகளிலும் நுழைந்து விடுகின்றன. இவற்றை தடுக்க லோயர்கேம்ப், கூடலுார், கம்பம், உத்தமபாளையம், பண்ணைப்புரம், தேவாரம், போடி வரை மழைநீர் வெளியேறும் ஓடைகளில் தடுப்பணைகள் கட்டி வீணாகும் மழைநீரை தடுத்து நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க அரசு புதிய திட்டம் கொண்டு வர வேண்டும். இதன்மூலம் தென்னை, வாழை, கொத்தமல்லி உள்ளிட்ட மற்ற பயிர்களும் அதிகமாக பயிரிடப்படும் வாய்ப்புள்ளது, என்றார்.