/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடியில் இருந்து கோவைக்கு விரைவு ரயில் இயக்க வலுக்கும் கோரிக்கை
/
போடியில் இருந்து கோவைக்கு விரைவு ரயில் இயக்க வலுக்கும் கோரிக்கை
போடியில் இருந்து கோவைக்கு விரைவு ரயில் இயக்க வலுக்கும் கோரிக்கை
போடியில் இருந்து கோவைக்கு விரைவு ரயில் இயக்க வலுக்கும் கோரிக்கை
UPDATED : ஜன 29, 2024 07:42 AM
ADDED : ஜன 29, 2024 06:36 AM

தேனி: 'மதுரை முதல் கோவை வரை இயங்கி வரும் பயணிகள் விரைவு ரயிலை, கோவை முதல் போடி வரை நீட்டிக்கவும், போடியில் இருந்து இயக்கும் நடவடிக்கைகளை மதுரை கோட்ட மேலாளர் மனம் இறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என, ரயில் பயணிகள், மண்டல ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர்கள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையில் காலை 6:55 மணிக்கு புறப்படும் கோவை மதுரை பயணிகள் ரயிலானது (வண்டி எண் 16722) பகல் 12:10 மணிக்கு 229 கி.மீ., துாரத்தை 5 மணி நேரம் 15 நிமிடங்களில் கடந்து கோவை சென்றடைகிறது. அங்கு 2 மணி நேரம் 25 நிமிடங்கள் காத்திருக்கும் அதே ரயில் (வண்டி எண் 16721) 2:40 மணிக்கு புறப்பட்டு மாலை 7:35 மணிக்கு மதுரை வந்தடைகிறது. மதுரை முதல் கோவை செல்லும் ரயிலை போடியில் இருந்து புறப்படும் வகையிலும், கோவை முதல் மதுரை வரும் ரயிலை போடி வரை நீட்டிக்கவும் மதுரை கோட்ட மேலாளர் மனம் இறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவ்வாறு நீட்டித்தால் தேனி, கோவை மாவட்ட வியபார பெருமக்கள், வணிகர்கள், சபரிமலை பக்தர்கள், கல்லுாரி மாணவ, மாணவிகள், விவசாயிகள், மருத்துவ சிகிச்சைக்காக கோவை, திருப்பூர் செல்வோர் பயனடைவர் என, தேனி மாவட்ட ரயில் பயணிகள் நல சங்கம், ஏலக்காய் நகர் ரயில் பயனாளர்கள் சங்கம், மண்டல ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.