/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மகப்பேறு புதிய கட்டடம் பயன்பாட்டிற்கு வருமா
/
மகப்பேறு புதிய கட்டடம் பயன்பாட்டிற்கு வருமா
ADDED : செப் 26, 2025 02:27 AM
கம்பம்: கம்பம் அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடியில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு சிறப்பு கட்டடம் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
கம்பம் அரசு மருத்துவமனையில் மாதந்தோறும் 200 பிரசவங்கள் வரை நடைபெறுகிறது. எனவே இங்கு 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கும் சீமாங் சென்டர் உள்ளது. கூடுதல் மகப்பேறு டாக்டர்கள், மயக்கவியல் டாக்டர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பிறந்த குழந்தை சிகிச்சை பிரிவு, குழந்தையின் காது கேட்கும் திறனை அறிய உதவும் கருவி உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.
பிரசவங்கள் அதிகம் நடப்பதால் மத்திய அரசு ரூ.10 கோடியில் மகப்பேறு சிறப்பு பிரிவு கட்டடம் கட்ட அனுமதி வழங்கியது. அதன்படி சில ஆண்டுகளாக கட்டடம் கட்டும் பணி நடந்தது. 2 மாடி கட்டட பணியின் போது கடந்த ஜூலையில் சிலாப் இடிந்து விழுந்து நம்பி ராஜன் என்பவர் பலியானார்.
அதன் பின் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. பணிகள் நிறைவு பெற்று பல மாதங்களை கடந்தும் பயன்பாட்டிற்கு அனுமதிக்காமல் உள்ளனர். எனவே பூட்டி வைக்கப்பட்டுள்ள ரூ.10 கோடியில் கட்டப்பட்டு மகப்பேறு சிறப்பு மற்றும் மேம்பாட்டு பிரிவு கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர இணை இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.