/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கோயிலை அகற்றி ஆம்னி பஸ் ஸ்டாண்ட் அமைக்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி
/
கோயிலை அகற்றி ஆம்னி பஸ் ஸ்டாண்ட் அமைக்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி
கோயிலை அகற்றி ஆம்னி பஸ் ஸ்டாண்ட் அமைக்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி
கோயிலை அகற்றி ஆம்னி பஸ் ஸ்டாண்ட் அமைக்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி
ADDED : ஜூலை 29, 2025 01:09 AM

தேனி: பெரியகுளத்தில் கோயிலை அகற்றி ஆம்னி பஸ் ஸ்டாண்ட் அமைக்க குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தேனி கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., மகாலட்சுமி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிச்செல்வி, மாவட்ட சமூக பாதுகாப்பு அலுவலர் சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மக்கள் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மனு அளித்தனர்.
அதில் காட்டுநாயக்கன் சமூக சீர்திருத்த சங்க தலைவர் காளியப்பன் உள்ளிட்டோர் அளித்த மனுவில், 'பெரியகுளத்தில் காட்டுநாயக்கன் சமுக மக்கள் குடியிருப்பு கோயிலை அகற்றி தனியார் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் அமைப்பதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றிருந்தது.
பெண் தீக்குளிக்க முயற்சி கலெக்டர் அலுவலகத்திற்கு பெண் ஒருவர் 6 வயது பெண் குழந்தையுடன் மனு அளிக்க வந்தார். நுழைவாயிலில் போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தனர். இதனை பார்த்தவர் நுழைவாயில் அருகிலேயே பாட்டிலில் கொண்டுவந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றினார்.
பாட்டிலை பறித்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில்,' அப்பெண் மதுரை மாவட்டம் எம்.புளியங்குளம் குருதேவி 26, என தெரிந்தது. இவருக்கும் சின்னமனுார் கீழப்பூலானந்தபுரத்தை சேர்ந்த பிரபு என்பவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஆறு வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் இவருடைய 15 பவுன் நகைகளை கணவர், அவரது குடும்பத்தினர் எடுத்து வைத்துள்ளனர் என்றும், இது தொடர்பாக சின்னமனுார் போலீஸ், எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த போது தீக்குளிக்க முயன்றதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
பெண் தர்ணா ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் இருந்து வந்த பெண் கலெக்டர் கார் நிறுத்தும் இடத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். டி.எஸ்.பி., சீராளன் தலைமையிலான போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.
மனுவில், 'என்னுடைய 17 வயது மகளை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கினார். வாலிபர் குடும்பத்தினரிடம் கூறிய போது, எங்களை அசிங்கமாக பேசி, திருமணம் செய்து வைக்க வரதட்சணை கேட்டனர்.
இது தொடர்பாக ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தும் அந்த வாலிபரை இதுவரை கைது செய்ய வில்லை. அந்த வாலிபர், குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினார்.