ADDED : மார் 21, 2025 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே எருமலைநாயக்கன்பட்டி இந்திரா காலனி தெருவைச் சேர்ந்த காமாட்சி மனைவி நாகுத்தாய் 65.
நேற்று முன்தினம் கழுவிய நீரை சாக்கடையில் ஊற்றுவதற்கு ரோட்டோரம் நின்று கொண்டிருந்தார். அதே ஊர் சாவடி தெருவைச் சேர்ந்தவர் பிரேம்குமார் 30.
டிராக்டர் ஓட்டி வந்து நாகுத்தாய் மீது மோதினார். வத்தலக்குண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து இறந்தார். ஜெயமங்கலம் போலீசார் பிரேம்குமாரிடம் விசாரிக்கின்றனர்.