/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தண்ணீர் தொட்டியில் விழுந்த பெண் பலி
/
தண்ணீர் தொட்டியில் விழுந்த பெண் பலி
ADDED : ஜூலை 05, 2025 12:30 AM
ஆண்டிபட்டி; கண்டமனூர் அருகே பொன்னம்மாள்பட்டியை சேர்ந்தவர் தாமரைச்செல்வி 42, இவரது கணவர் முத்து முருகன் 48, தற்போது பொன்னம்மாள்பட்டியில் புதிதாக வீடு கட்டி வருகின்றனர்.
இரு நாட்களுக்கு முன் வீட்டின் மேற்கூரைக்கு கான்கிரீட் போட்டுள்ளனர். மறுநாள் அதிகாலை வழக்கம் போல முத்துமுருகன் காளவாசல் வேலைக்கு சென்று விட்டார். வேலை முடித்து வீட்டிற்கு வந்தபோது மனைவி வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடிப் பார்த்து விசாரித்ததில் புதிய வீட்டிற்கு தண்ணீர் ஊற்ற சென்ற தகவல் தெரியவந்தது. அங்கு சென்று பார்த்தபோது முருகேஸ்வரி வீட்டுக்குள் உள்ள தொட்டியில் தலையில் ரத்த காயத்துடன் மூழ்கி இறந்து கிடந்துள்ளார். அடிக்கடி வரும் தலைச்சுற்றலால் பாதிக்கப்படும் தாமரைச்செல்வி புது வீட்டிற்கு தண்ணீர் ஊற்றுவதற்காக சென்றபோது, தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்தது தெரிய வந்துள்ளது. சம்பவம் குறித்து முத்து முருகன் கொடுத்த புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.