ADDED : பிப் 13, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு : இடுக்கி மாவட்டம் உடும்பன்சோலையில் பக்கத்து வீட்டுக்காரர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்க முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
உடும்பன்சோலையைச் சேர்ந்தவர் ஏலத்தோட்ட தொழிலாளி ஷீலா 31. இவரது வீட்டின் அருகில் வசிக்கும் சசி, பிப்.8ல் ஷீலாவின் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.
அதில் உடல் முழுவதும் ஷீலாவுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சசிக்கு சிறிது தீக்காயங்கள் ஏற்பட்டன.
தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஷீலா, இடுக்கி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சசி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சை முடிந்து சசி திரும்பிய நிலையில் ஷீலா நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். உடும்பன்சோலை போலீசார் சசியை கைது செய்தனர்.