/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
யானை குட்டியிடம் உயிர் தப்பிய பெண்
/
யானை குட்டியிடம் உயிர் தப்பிய பெண்
ADDED : ஆக 16, 2025 02:56 AM

மூணாறு: மூணாறு அருகே கல்லார் பீச்சாடு பிளா மலைகுடியில் காட்டு யானையிடம் சிக்கிய பெண் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
பீச்சாடு, பிளாமலை ஆகிய பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை கொண்ட கூட்டம் கடந்த ஒரு மாதமாக சுற்றித்திரிகின்றன. அந்த கூட்டத்தை விட்டு அவ்வப்போது பிரிந்து செல்லும் யானை குட்டி ஒன்று குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து விடுகிறது. நேற்று முன்தினம் காலை பிளாமலைகுடியில் குடியிருப்பு பகுதிக்கு வந்த யானை குட்டியை காட்டிற்குள் விரட்டினர். குடியிருப்புக்கு வந்த யானை குட்டி, அப்பகுதியில் வீட்டின் அருகே ஏலத்தோட்டத்தில் ஏலக்காய்களை சேகரித்துக் கொண்டிருந்த இந்திரா 52, வை முட்டி கீழே தள்ளியது. பள்ளத்தில் உருண்டதால் யானை குட்டி திரும்பி சென்றது. சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய இந்திராவை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

