/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வடுகபட்டியில் டாஸ்மாக், பார் அகற்ற பெண் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
/
வடுகபட்டியில் டாஸ்மாக், பார் அகற்ற பெண் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
வடுகபட்டியில் டாஸ்மாக், பார் அகற்ற பெண் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
வடுகபட்டியில் டாஸ்மாக், பார் அகற்ற பெண் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 01, 2025 12:29 AM
பெரியகுளம்: வடுகபட்டியில் டாஸ்மாக் கடை, தனியார் மதுபாரை அகற்றக்கோரி பேரூராட்சி கூட்டத்தில் பெண் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
வடுகபட்டி பேரூராட்சி கூட்டம் தலைவர் நடேசன் (தி.மு.க.,) தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் அழகர் (காங்.,), செயல்அலுவலர் உமாசுந்தரி முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் கூட்டத்தில் பேசியதாவது:
சிவா (தி.மு.க.,): வடுகபட்டியில் பெரும்பாலான பகுதியில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் சுடுகாட்டில் எரிவாயு தகனமேடை அமைக்க வேண்டும். அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய பேரூராட்சிக்கு அதிக நிதி பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனோரஞ்சிதம் (வி.சி.,): 13வது வார்டில் செயல்பட்டு வந்த துணைசுகாதார நிலைய கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
புதிய கட்டடம் கட்டுவதற்கு முந்தைய கலெக்டர் முரளீதரன் பார்வையிட்டு பல ஆண்டுகள் ஆகியுள்ளது தற்போதைய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர்: சுகாதாரத்துறை நிர்வாகத்திடம் தெரிவிக்கப்படும்.
விமலா (சுயே.,): வடுகபட்டி பேரூராட்சியில் அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக டாஸ்மாக் கடை, தனியார் மதுபார் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. இதனை அகற்ற பேரூராட்சி கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி கலெக்டரிடம் கொடுத்தது என்னாச்சு. இதனை ஆமோதித்து அனைத்து பெண் கவுன்சிலர்கள் தலைவரிடம் கேள்வி எழுப்பினர்.
தலைவர்: கலெக்டர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார் என்றார்.
பெரியகுளம் சட்டசபை தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 13 வது வார்டு வள்ளுவர் தெருவில் ரூ.14.50 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் அமைப்பது, கலையரங்கம் பின்புறம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை துணை மருந்தகம் அமைத்தல் உட்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.-