/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கோழிவளர்ப்பில் ஆர்வமுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்
/
கோழிவளர்ப்பில் ஆர்வமுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்
ADDED : அக் 02, 2024 07:17 AM
தேனி : கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ள ஊரகப்பகுதி பெண்கள் அசில் இன கோழி வளர்ப்பு திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
கால்நடைப்பராமரிப்புத்துறை மூலம் ஊரகப்பகுதியில் உள்ள பெண்களை தொழில் முனைவோர் ஆக்கும் வகையில் புறக்கடை கோழி வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
திட்ட மதிப்பீடு ரூ.3200, இதில் 50சதவீதம் அதாவது ரூ.1600 மானியமாக வழங்கப்படும். அதில் ரூ. 80 மதிப்புள்ள 40 அசில் இன கோழி குஞ்சுகளை பயனாளிகள் கொள்முதல் செய்ய வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற ஏழைப்பெண்கள், விதவைகள், ஆதரவற்றோர், உடல் ஊனமுற்றோர் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பவர்கள் முந்தைய ஆண்டுகளில் கறவைமாடு, ஆடு கோழிப்பண்ணை திட்டத்தில் பயனடைந்திருக்க கூடாது. மாவட்டத்தில் ஒரு ஒன்றியத்திற்கு தலா 100 பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.