/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மகளிர் ஸ்டேஷனில் காத்திருப்பு அறை இன்றி அவதி
/
மகளிர் ஸ்டேஷனில் காத்திருப்பு அறை இன்றி அவதி
ADDED : செப் 05, 2025 02:43 AM

பெரியகுளம்: பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வருவோருக்கு காத்திருப்பு அறை இன்றி சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
பெரியகுளம் ஆடுபாலம் அருகே நகராட்சி வணிக வளாகம் கட்டடத்தில் அனைத்து மகளிர் ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது. பெரியகுளம் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட தென்கரை, வடகரை, ஜெயமங்கலம், தேவதானப்பட்டி ஆகிய 4 ஸ்டேஷன்களிலிருந்து தினமும் வரதட்சணை கொடுமை, கணவன், மனைவியிடையே தகராறு, சிறுமி திருமணம் போக்சோ வழக்கு, உட்பட பெண்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அவஸ்தை: தேவதானப்பட்டி ஸ்டேஷனுக்கு உட்பட்ட ஜி.மீனாட்சிபுரம், தென்கரை ஸ்டேஷனுக்கு உட்பட்ட அகமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் புகார் கொடுக்க 46 கி.மீ.துாரம் கடந்து வரும் முதியோர், கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வருபவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் புகார் கொடுக்க பலர் வருகின்றனர்.
இவர்களுக்கு காத்திருக்கும் அறை இல்லை. குடிநீர், சிறுநீர் கழிப்பிட வசதி இல்லை. இதனால் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் மாடியில் செயல்படும்
கூட்டுறவு தணிக்கை இயக்குனர் அலுவலகம் படிக்கட்டில் வெயில் வெகுநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
ஏற்கனவே மனதளவில் சோர்வடையும் பெண்கள், உட்கார இடம் இல்லாமல் சங்கடத்தில் உள்ளனர். மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.