/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இளநிலை பொறியாளர்கள் இன்றி பேரூராட்சிகளில் பணிகள் பாதிப்பு
/
இளநிலை பொறியாளர்கள் இன்றி பேரூராட்சிகளில் பணிகள் பாதிப்பு
இளநிலை பொறியாளர்கள் இன்றி பேரூராட்சிகளில் பணிகள் பாதிப்பு
இளநிலை பொறியாளர்கள் இன்றி பேரூராட்சிகளில் பணிகள் பாதிப்பு
ADDED : ஜூன் 28, 2025 11:53 PM
தேனி: மாவட்டத்தில் பல பேரூராட்சிகளில் இளநிலை பொறியாளர்கள் இன்றி வளர்ச்சி பணிகள் தேக்கமடைந்துள்ளன.மாவட்டத்தில் 22 பேரூராட்சிகள் உள்ளன. பேரூராட்சிகளில் செயல் அலுவலர் நிர்வாகம், அரசு திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்டவற்றை கவனிக்கின்றனர்.
இவர்கள் தவிர பேரூராட்சிகளின் பணிகளை கண்காணிக்க சுகாதார ஆய்வாளர்கள், இளநிலை பொறியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.மாவட்டத்தில் ஆண்டிபட்டி, தென்கரை, காமயகவுண்டன்பட்டி, உத்தமபாளையம், தேவாரம், மேலசொக்கநாதபுரம், பழனிசெட்டிபட்டி ஆகிய 7 பேரூராட்சிகளை தலைமையாக கொண்டு 7 இளநிலை பொறியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் அருகில் உள்ள இரு பேரூராட்சிகளை சேர்த்து கவனிக்கின்றனர்.
இவர்கள் பேரூராட்சிகளில் நடைபெறும் ரோடு, அரசு கட்டடங்கள், சாக்கடை சீரமைப்பு, புதிய கட்டுமானம் உள்ளிட்ட பணிகளை கண்காணிப்பார்கள். திட்ட பணிக்கு தேவையான பட்டியல் தயாரிப்பது, பணி முடிந்த பின் முடிவு அறிக்கை சமர்ப்பிக்கின்றனர்.
ஆனால், தற்போது காமயகவுண்டன்பட்டி, உத்தமபாளையம், தேவாரம் ஆகிய தலைமை பேரூராட்சிகளில் இளநிலை பொறியாளர் பதவியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால் கூடுதலாக இரண்டு பேரூராட்சிகளை கவனிக்கும் நிலை உள்ளது. மேலும், கூடுதலாக கவனிக்கும் போது மற்ற இடங்களில் பணிகள் பாதிக்கப்படுகிறது.
பேரூராட்சிகளில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ற கோரிக்கை எழுந்துள்ளது.