/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை
/
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை
ADDED : நவ 30, 2024 06:20 AM

தேனி; கம்பம் தாலுகாவை சேர்ந்த 14 வயது சிறுமி 2023 ஆக.13ல் தனது பாட்டி வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார்.
கம்பம் கம்பமெட்டு ரோடு கூலித் தொழிலாளி சையது அபுதாஹிர் 39, அந்த வீட்டில் நுழைந்து, துாங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
சிறுமியின் உறவினர் கம்பம் வடக்கு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சையது அபுதாஹிரை போக்சோவில் கைது செய்தனர்.
இந்த வழக்கு தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கூடுதல் வழக்கறிஞர் விவேகானந்தன் ஆஜரானார்.
விசாரணை முடிந்து நேற்று குற்றவாளி சையது அபுதாஹிருக்கு 4 ஆண்டுகள் சிறை, 2 ஆயிரம் அபராதம் விதித்து கூடுதல் மாவட்ட நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.