/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மனைவியிடம் பேசியவரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள்
/
மனைவியிடம் பேசியவரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள்
ADDED : அக் 29, 2025 02:32 AM

தேனி: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் மனைவியிடம் பேசிய ஈஸ்வரன் 31, என்பவரை சந்தேகமுற்று கொலை செய்த ஆடு மேய்க்கும் தொழிலாளி நாகேஷூக்கு 51, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
உத்தமபாளையம் அம்பாசமுத்திரம் மேற்குத்தெருவைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி நாகேஷ் 40. அவரது மனைவி ராஜம்மாள் 38, மீது சந்தேகமுற்று 2012 அக்., 3ல் கத்தியால் குத்த முயன்றார்.
மகள் காளியம்மாள் புகாரின்படி போலீசார் விசாரித்து நாகேைஷ கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர்.
அவருக்கு மகிளா நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
மதுரை சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த நாகேஷ் ஊர் பெரியவர்கள் ஆலோசனையை ஏற்று மனைவி ராஜம்மாளுடன் சேர்ந்து வாழ்ந்தார்.
அப்போது வீட்டின் அருகில் வசித்த ஈஸ்வரன் 31, உறவுமுறையில் மனைவியுடன் பேசி பழகியதை நாகேஷ் சந்தேகப்பட்டு அவர் மீது பகை கொண்டார்.
இந்த முன்விரோதத்தில் 2014 பிப்., 15ல் தேனியில் இருந்து வந்த தன் தங்கை ஈஸ்வரியை வீட்டிற்கு அழைத்து செல்ல ஈஸ்வரன் உத்தமபாளையம் பஸ் ஸ்டாண்ட் வந்தார்.
அப்போது அங்கு வந்த நாகேஷ் கத்தியால் ஈஸ்வரனை குத்தி கொலை செய்து தலைமறைவானார்.
போலீசார் அவரை தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் நீதிமன்றம், தேடப்படும் குற்றவாளி' என அறிவித்தது.
பின் 2024 கோவை சூலுாரில் தலைமறைவாக இருந்த நாகேஷை உத்தமபாளையம் போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. நாகேஷூக்கு ஆயுள் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தீர்ப்பளித்தார்.

