ADDED : ஆக 02, 2025 01:00 AM
தேனி: தேனி அரசு மருத்துவக் கல்லுாரி குழந்தைகள் நல சிகிச்சைத் துறையின் சார்பில், உலக தாய்ப்பால் வார விழா சீமாங் மையத்தின் துவங்கியது.
மருத்துவக்கல்லுாரி முதல்வர் முத்துச்சித்ரா குத்துவிளக்கு ஏற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்.
பிரசவித்த 50 தாய்மார்களுக்கு தாய்ப்பால் வழங்குவதால் தாய் சேய் நலம் குறித்து விளக்கிக் கூறினார்.
துறைத் தலைவர் டாக்டர் செல்வக்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் விஜய் ஆனந்த்,உதவி நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் மணிமொழி முன்னிலை வகித்தனர். இணைப் பேராசிரியர் டாக்டர் வசந்தமலர், தாய்ப்பால் கொடுக்கும் முறைகள் குறித்தும், அதனால் தாயின் உடலில் ஏற்படும் மாற்றங்கள், குழந்தைகளுக்கு உருவாகும் நலன்கள் பள்ளி விளக்கினார்.
டாக்டர் ரகுபதி சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். இந்திய குழந்தைகள் நல குழுமத்தின் தேனி கிளையின் தலைவர் டாக்டர் ராமசாமி, செயலாளர் டாக்டர் ஜெகதீஸ், பொருளாளர் டாக்டர் முத்துப்பாண்டி, இணைப் பேராசிரியர் டாக்டர் கார்த்திக், முதுநிலை குழந்தைகள் நல பயிற்சி மருத்துவ மாணவர்கள், மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர்.
ஆக.1 முதல் ஆக.7 வரை தாய்பால் வார விழா கொண்டாடப்படுகிறது.