/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளி, கல்லுாரியில் உலக தியான தின கொண்டாட்டம்
/
பள்ளி, கல்லுாரியில் உலக தியான தின கொண்டாட்டம்
ADDED : டிச 22, 2024 09:21 AM

உத்தமபாளையம் : உத்தம பாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியில் உலக தியான தினம் கொண்டாடினர். இக் கல்லூரியின் யோகா கிளப் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான 'ஒன் பிரீத், ஒன் மொமென்ட் , ஒன் வேல்டு' ( One Breath, one moment, one world ) என்னும் தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது.
கல்லுாரி முதல்வர் முகமது மீரான் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருதேவ்வின் வாழும் கலை மையத்தில் இருந்து மூச்சு பயிற்சி தியானம் செயல் முறை விளக்கம், இதனால் கிடைக்கும் பலன்கள் பற்றி யோகா ஆசிரியர் செந்தில்குமார், தெய்வேந்திரன் ஆகியோர் பயிற்சியளித்தனர். நிகழ்ச்சியில் 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
விலங்கியல் துறை பேராசிரியர் விண்ணொளி வரவேற்றார்.
மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பேராசிரியர்கள் ராஜேஷ் கண்ணா, வேல்முருகன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
கம்பம் : கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் - மேல்நிலைப்பள்ளியில் உலக தியான தினம் கொண்டாடப்பட்டது.
திரளாக மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தாளாளர் காந்த வாசன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் இணை செயலர் சுன்யா, முதல்வர் புவனேஸ்வரி, துணை முதல்வர்கள் லோகநாதன், சரவணன், யோகா ஆசிரியர்கள் ராஜேந்திரரன், ரவி ஆகியோர் பங்கேற்றனர்.