/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உலக புகையிலை எதிர்ப்பு தின மாரத்தான் ஓட்டம்
/
உலக புகையிலை எதிர்ப்பு தின மாரத்தான் ஓட்டம்
ADDED : ஜூன் 01, 2025 12:29 AM
மூணாறு: மூணாறில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நேற்று கலால்துறை சார்பில் 'மாரத்தான்' ஓட்டம் நடந்தது.
மூணாறு, தேவிகுளம், அடிமாலி ஆகிய ரேஞ்ச் சார்பில் நடந்த ஓட்டம், மூணாறு நகரில் பெரியவாரை ஜீப் ஸ்டாண்டில் துவங்கியது.
அதனை ஊராட்சி தலைவர் மணிமொழி துவக்கி வைத்தார். கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் 'சிக்னல் பாய்ண்ட்' பகுதியில் ஓட்டம் நிறைவு பெற்றது.
ஊராட்சி துணை தலைவர் மார்ஸ்பீட்டர், கலால்துறை மூணாறு இன்ஸ்பெக்டர் அனில்குமார், தேவிகுளம் இன்ஸ்பெக்டர் விஷ்ணு, உதவி இன்ஸ்பெக்டர் அப்துல்லா குஞ்சு, அடிமாலி இன்ஸ்பெக்டர் அவின்சாஜூ ஆகியோர் உள்பட பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மாரத்தானில் பங்கேற்றனர்.