/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கழிவுநீரில் வால்புழுக்கள் உருவாகி வீட்டிற்குள் வரும் அவலம்; பெரியகுளம் நகராட்சி 11வது வார்டு மக்கள் புலம்பல்

ADDED : மார் 01, 2024 12:22 AM

பெரியகுளம் : பெரியகுளம் நகராட்சி 11-வது வார்டில் சாக்கடையில் கழிவுநீர் அகற்றாததால் அதில் வால்புழுக்கள் உருவாகி வீட்டுக்குள் வருவதால் சுகாதார கேட்டில் சிக்கி தவிப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
பெரியகுளம் நகராட்சியில் 11 வது வார்டில் பட்டாப்புளி நடுத்தெரு, மேலத்தெரு, பேட்டை தெருக்கள் அடங்கியுள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். பின்தங்கிய இப் பகுதியில் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். தெருக்களில் வீடுகள் மிக நெருக்கமாக உள்ளன.
இப் பகுதியில் புதிதாக சாக்கடை கட்டப்படாததால் கழிவுநீர் தேங்குகிறது. முறையாக கழிவுநீர் அகற்றம் இல்லாததால் துர்நாற்றம் வீசி, சுகாதாரத் கேடு ஏற்படுகிறது. கழிவுநீரில் வால் புழுக்கள் உருவாகி அவை வீட்டிற்குள் வருகிறது. சுகாதார சீர்கேட்டால் பலரும் காய்ச்சல் பாதிப்பிற்குள்ளாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை உள்ளது. தெருவில் பதிக்கப்பட்ட பேவர் பிளாக் கற்கள் ஏற்றம் இறக்கமாக உள்ளதால் இரவில் மக்கள் தடுமாறி விழுகின்றனர்.
தடுப்புச்சுவர் இடிந்து பன்றிகள் உலா
மதன், பட்டாபுளித்தெரு, பெரியகுளம் :பெண்கள் சுகாதார வளாகத்தை ஒட்டியுள்ள தடுப்பு சுவர், வாரி வாய்க்காலில் வெள்ளம் வந்தபோது பாதி சுவர் இடிந்து கீழே விழுந்தது. இதனால் வாய்க்கால் வழியாக பெண்கள் சுகாதார வளாகப் பகுதியில் பன்றிகள் உலா வருகிறது. சுகாதார வளாகம் திறந்தவெளியாக இருப்பதால் விஷ பூச்சிகள் வருவதால் பெண்கள் அச்சமடைகின்றனர்.
பாதுகாப்பு கருதிசுற்றுச்சுவரை கட்டி தர பொதுமக்கள் பலரும் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. தெருக்குழாய் பற்றாக்குறையால் குடிநீர் பிடிப்பதில் சிரமமாக உள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப பொதுக்குழாய் அமைக்க வேண்டும்.