/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
/
மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஏப் 19, 2025 06:11 AM
தேனி; ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், ஊரகம்,நகர்புறங்களில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு,கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள், நகர்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள் ஆகிய அமைப்புகளுக்குஅரசால் மணிமேகலை விருது வழங்கப்படும்.
2024 - --2025க்கான இவ்விருது பெற தகுதியான அமைப்புகள் விண்ணப்பிக்கலாம். விருதுக்கு தேர்வு செய்யும் நடைமுறைகள் வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு உட்பட்டதாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நகர்புறபகுதிகளில் நகராட்சி, பேரூராட்சி சமுதாய அமைப்பாளர்களிடமும், ஊரக பகுதிகளில் உள்ளவர்கள் வட்டார இயக்க மேலாண்மை அலுவலக மேலாளர்களிடம் ஏப்.30க்குள் சமர்பிக்க வேண்டும் என,கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

