/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தொழிலாளர்களின் துாக்கத்தை கெடுத்த படையப்பா
/
தொழிலாளர்களின் துாக்கத்தை கெடுத்த படையப்பா
ADDED : ஜன 08, 2024 05:05 AM

மூணாறு, : மூணாறு அருகே கன்னிமலை எஸ்டேட் பாக்டரி டிவிஷனில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் நடமாடிய படையப்பா தொழிலாளர்களின் தூக்கத்தை கெடுத்தது.
மூணாறு பகுதியில் வலம் வரும் பிரபல ஆண் காட்டு யானை படையப்பா கடந்த மூன்று நாட்களாக கன்னிமலை எஸ்டேட் பகுதியில் முகாமிட்டது. அந்த யானை நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு கன்னிமலை எஸ்டேட் பாக்டரி டிவிஷனில் தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் சென்றது. அதனை 10:30 மணிக்கு வனத்துறையினர் குடியிருப்பு பகுதியை விட்டு வெளியேற்றி காட்டிற்குள் விரட்டினர்.
அதன் பின் இரவு 11:00 மணிக்கு மீண்டும் குடியிருப்பு பகுதிக்கு வந்த படையப்பா இரவு முழுவதும் முகாமிட்டு ஜெயராம், ராஜேந்திரன் உள்பட பலரது தோட்டங்களில் இருந்து வாழை, பீன்ஸ் உள்பட பல்வேறு காய்கறிகளை தின்றதுடன் சேதப்படுத்தியது. இரவு முழுவதும் தொழிலாளர்களின் உறக்கத்தை கெடுத்த படையப்பா நேற்று காலை 6:30 மணிக்கு குடியிருப்புப் பகுதியை விட்டு தாமாக வெளியேறி காட்டிற்குள் சென்றது.