ADDED : ஜன 16, 2025 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: ஆண்டிபட்டி தாலுகா டி.சுப்புலாபுரம் கிழக்குத்தெரு குருசாமி 40. கட்டடத் தொழிலாளி. இவரது மகள் தர்சினி 19.
இவர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார்.
பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாததால் வீட்டில் இருந்து வந்தார்.
ஜன.13ல் குருசாமி வேலைக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு வந்தபோது மகளை காணவில்லை. தந்தை புகாரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்குப் பதிந்து இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

