ADDED : ஜூலை 07, 2025 02:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவாரம் : தேவாரம் மல்லிங்கர் கோயில் தெருவை சேர்ந்தவர் உதயராஜா 41. இவர் மே 27 ல் குடும்பத்துடன் போடியில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளார்.
மறு நாள் மாலையில் ஊருக்கு வந்து வீட்டை திறந்து பார்த்த போது, வீட்டின் பெட்ரூமில் இருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான 3 பவுன் செயின், ஒரு பவுன் மோதிரம் திருடு போனது தெரிந்தது. வீட்டின் மாடி கதவின் பூட்டு உடைக்கப் பட்டு இருந்தது. திருட்டு குறித்து உதயராஜா போலீசில் புகார் அளித்தார். போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை சோதனை மேற்கொண்டதில் தேவாரம் ஐயப்பன் கோயில் தெருவை சேர்ந்த சிவசூர்யா வந்து சென்றது தெரிந்தது. தலைமறைவாக இருந்த சிவசூர்யாவை தேவாரம் போலீசார் நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.