/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
/
பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
ADDED : அக் 18, 2024 05:49 AM
தேனி: பெண்ணிடம் பழகி அவரது படங்களை கணவரிடம் காண்பித்து விடுவதாக கூறி ரூ 2 லட்சம் கேட்டு மிரட்டிய வரை போலீசார் கைது செய்தனர்.
ஓடைப்பட்டி சீப்பாலக்கோட்டையை சேர்ந்த நிவேதா 23. இவருக்கும் அதேப் பகுதியை சேர்ந்த அருண்குமாருக்கும் 27, ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. நிவேதா மாமியாருடன் வசித்து வருகிறார். கணவர் அருண்குமார் கோவையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் சசிக்குமார் நிவேதாவிடம் ஆசை வார்த்தைக்கூறி பழகினார். இருவரும் வீடியோ காலில் பேசும் போது சசிக்குமார் நிவேதாவின் படங்களை ஸ்கீரின் சாட் எடுத்து வைத்து கொண்டார். பின் சீப்பாலக்கோட்டை பட்டித் தெருவில் ஆட்டுக்கொட்டத்திற்கு அழைத்த, சசிக்குமார், உன்னால்தான் என் குடும்பம் கெட்டுப்போச்சு, ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டி, பணம் தரவில்லை எனில் கணவருக்கு ஆபாச படங்களை காண்பித்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இது குறித்து நிவேதா ஓடைப்பட்டி போலீஸ் எஸ்.ஐ., பாண்டிசெல்வியிடம் புகார் அளித்தார். போலீசார் சசிக்குமாரை கைது செய்தனர்.