நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவாரம்: தேவாரம் அருகே கருக்கோடை மதுரை வீரன் கோயில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் 19.
இவர் பெட்ரோல் பங்கில் வேலை செய்தார். நேற்று முன்தினம் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்துள்ளார்.
இவரது தந்தை பன்னீர்செல்வம் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த லோகநாதன் விஷம் குடித்துள்ளார். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவரை பரிசோதித்த டாக்டர் லோகநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
பன்னீர்செல்வம் புகாரில் தேவாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.