/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கத்தியுடன் வாலிபர் ரகளை போலீசில் ஒப்படைப்பு
/
கத்தியுடன் வாலிபர் ரகளை போலீசில் ஒப்படைப்பு
ADDED : பிப் 02, 2025 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனியில் பெரியகுளம் ரோட்டில் காலை 9:00 மணி அளவில் பட்டா கத்தியுடன் ரயில்வே கேட் பகுதியில் இருந்து ஒருவர் நடந்து சென்றார்.
கோட்டைகளத்தெருவிற்கு செல்லும் குறுக்கு தெருவின் அருகே சென்றபோது ரோட்டில் சென்றவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டினார். சிலர் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓட்டம் பிடித்தனர். அவ்வழியாக சென்ற ஆட்டோக்கள், டூவீலர்களில் கத்தியை கொண்டு தாக்கினார். ஆத்திரமடைந்த சில வாகன ஓட்டிகள் இணைந்து வாலிபரை பிடித்து 'கவனித்து' கைகளை கட்டினர்.
போலீசாருக்கு தகவல் தெரிவித்து ஒப்படைத்தனர். விசாரணையில் தேனி ஓடைத்தெரு கருப்பையா 25, என தெரிந்தது. அவரை, தேனி போலீசார் கைது செய்தனர்.