/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
சார்ஜ் போட்டிருந்தபோது தீப்பிடித்து பைக், 2 கார்கள் எரிந்து சேதம்
/
சார்ஜ் போட்டிருந்தபோது தீப்பிடித்து பைக், 2 கார்கள் எரிந்து சேதம்
சார்ஜ் போட்டிருந்தபோது தீப்பிடித்து பைக், 2 கார்கள் எரிந்து சேதம்
சார்ஜ் போட்டிருந்தபோது தீப்பிடித்து பைக், 2 கார்கள் எரிந்து சேதம்
ADDED : ஆக 03, 2024 12:11 AM
விக்கிரமசிங்கபுரம்:விக்கிரமசிங்கபுரத்தில் சார்ஜ் போட்டிருந்தபோது தீப்பிடித்து எலக்ட்ரிக் பைக், ௨ கார்கள் எரிந்து சேதமடைந்தன.
விக்கிரமசிங்கபுரம் வடக்குரதவீதியில் வசித்து வருபவர் சுப்பையா மகன் மாணிக்கம் (34). இவர் நேற்று காலை தனது வீட்டில் பேட்டரி பைக்கிற்கு சார்ஜ் போட்டிருந்தார். அப்போது திடீரென பைக் தீ பிடித்து எரிந்தது. தீ கொழுந்துவிட்டு எரிந்த நிலையில் அதன் அருகில் நிறுத்தியிருந்த 2 கார்களிலும் தீ பிடித்தது. இதில் எலக்ட்ரிக் பைக்கும் ஒரு காரும் முழுவதும் எரிந்தது.
சம்பவ இடத்திற்கு அம்பாசமுத்திரம் தீயணைப்பு துறை அலுவலர் பலவேசம் தலைமையில் வந்த வீரர்கள் தீயை அணைத்தனர்.
இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.