/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஜாதி மறுப்பு திருமணத்துக்கு எதிராக செயல்படும் ஜாதி கூலிப்படையினர்; மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி

ADDED : ஜூன் 18, 2024 12:22 AM

திருநெல்வேலி : ''ஜாதி மறுப்பு திருமணத்திற்கு எதிராக நடந்த தாக்குதல் பின்னணியில் உள்ள ஜாதி கூலிப்படையினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, திருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருநெல்வேலி மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் நடந்த மதன்குமார், உதய தாட்சாயிணியின் ஜாதி மறுப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினர். 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆறு ஆண்கள் கைது செய்யப்பட்டனர். 7 பெண்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து கட்சி அலுவலகத்தில் பாலகிருஷ்ணன் கூறியதாவது: ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு மார்க்சிஸ்ட் எப்போதும் ஆதரவளிக்கும். இத்தகைய தம்பதிகளுக்கு அரசு பாதுகாப்பு, வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். இத்தகைய சம்பவங்களில் கொலைகள் கூட நடந்துள்ளன. இத்தகைய திருமணங்களுக்கு பெற்றோர் அனுமதித்தால் கூட ஊதிப்பெரிதாக்குவது சில ஜாதிய சங்கங்கள் தான். இத்தகைய ஜாதி அமைப்புகள் மீதும் சமூக விரோத சக்திகள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநெல்வேலியில் செயல்படும் ஜாதி கூலிப்படையினர் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூலிப்படை யார் என்பது போலீஸ் துறைக்கு தெரியும். கூலிப்படைகளின் அனுதாபத்தில் தான் நாம் உயிர் வாழ்கிறோம் என்ற நிலை உள்ளது. தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் ஆணவக்கொலைகள் நடக்கின்றன.
ஜாதி மறுப்பு திருமணங்கள் செய்வோர் பாதுகாக்கப்பட வழிமுறைகளை உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது. இது தொடர்பாக வரும் சட்டசபை கூட்டத்தொடரில் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் பேசுவர். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை அரசு பாதுகாக்க வேண்டும்.
அதனை அரசு ஏற்று நடத்த வேண்டும். மாஞ்சோலை தொழிலாளர்களுடன் இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினை சந்திக்கவுள்ளோம் என்றார்.